Onetamil News Logo

கள்ளக்காதலை தொடர உடன் பிறந்த அண்ணனையே தீர்த்துக்கட்டிய வாலிபரால் பரபரப்பு

Onetamil News
 

கள்ளக்காதலை தொடர உடன் பிறந்த அண்ணனையே தீர்த்துக்கட்டிய வாலிபரால் பரபரப்பு


சிவகங்கை 2019 ஜூன் 18 ;சிவகங்கை அருகே  கள்ளக்காதலை தொடர உடன் பிறந்த அண்ணனையே தீர்த்துக்கட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது. 
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே வலசைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகையா (வயது 40) இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.இவரை முசுண்டப்பட்டி- துவரங்குறிச்சி சாலையில் உள்ள ஒரு பாலத்தின் கீழே , கொன்று போட்டுள்ளனர். 
இது குறித்து புழுதிப்பட்டி போலீஸ் விசாரணையில் முருகையா சாவுக்கான பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் முருகையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.முருகையாவின் மனைவி மணிமேகலைக்கும் (36), முருகையாவின் தம்பி பிச்சமணிக்கும் (34) இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து தெரிய வந்ததால் முருகையா தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் முருகையாவை  மணிமேகலையும், பிச்சமணியும் சேர்ந்து  கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரியவருகிறது. பின்னர் அவரது உடலை 2 பேரும் சேர்ந்து அங்குள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கி வந்து, ரோட்டோரம் உள்ள ஒரு பாலத்திற்கு அடியில் போட்டுச் சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து பிச்சமணி, மணிமேகலையை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 
                       
 கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவரையும், அவருடைய அண்ணியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.                      
                               
கொலை செய்யப்பட்ட முருகையாவுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை கொலை செய்யப்பட்டதாலும், தாயார் ஜெயிலில் அடைக்கப்பட்டதாலும் அந்த 4 பிள்ளைகளும் பெற்றோரை பிரியும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo