Onetamil News Logo

பட்டாசு முகவர் மனைவி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பியானார் 

Onetamil News
 

பட்டாசு முகவர் மனைவி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பியானார் 


சிவகாசி 2020 ஜனவரி 25 ; சிவகாசியைச் சேர்ந்த பெண்,மேல்நிலைக் கல்வியை பாதியில் நிறுத்தியவர்.இவர் பள்ளிக் கல்வியை தொடர முடியாத நிலையில், தொலைநிலைக் கல்வியில் படித்து டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ளார்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள மல்லி ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் காமாட்சி. பிளஸ் 1 படித்தபோதே 2005-ல் இவருக்கு திருமணம் நடந்தது. இதனால், கல்வியைத் தொடர முடியவில்லை. திருமணத்துக்குப் பிறகு 2013-ம் ஆண்டு தனித் தேர்வு எழுதி பிளஸ் 2 படித்து 1070 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். குரூப்-4 தேர்வில் 2014-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற இவர், மதுரை வேளாண் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது குரூப்- 1 தேர்வில் ஒரே முயற்சியில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வாகி உள்ளார். இது குறித்து காமாட்சி கூறியதாவது: எனது கணவர் பட்டாசு முகவர். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.பணிக்குச் செல்லும் நிலையில், கல்லூரிசென்று பட்டப்படிப்பு முடிக்காததால்குருப் 1 தேர்வுகளில் வெற்றிபெற முடியுமா என சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் தொலைநிலைக் கல்வியில் 2018-ல் பிஏ. தமிழ் இலக்கியம் முடித்தேன். குரூப்-1 தேர்வு எழுதலாம் என நினைத்தபோது மதுரையிலுள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தின் இயக்குநரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் குரூப் 1 தேர்வு எழுத எனக்கு நம்பிக்கை ஊட்டினார். அதற்கான தேடலையும் கற்றுக் கொடுத்தார்.
மதுரை கே.கே. நகரிலுள்ள அவரது பயிற்சி மையத்தில் கடந்த ஓராண்டாகப் படித்தேன். ஒரே முயற்சியில் 2019-ல் நடந்தகுரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் வெற்றிபெற்றேன். காவல் துறையில் டிஎஸ்பியாக தேர்வானது எனது கிராமத்துக்குப் பெருமை. இதைக் கேள்விப்பட்ட எங்களதுகிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த வெற்றிக்கு கணவர் மகாலிங்கம் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். இரவில் மட்டுமே படிக்க நேரம் கிடைக்கும். பெண் என்பதால் கிராமத்திலுள்ள பெண்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன். இதனால், பெண்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக டிஎஸ்பி பணியைத் தேர்ந்தெடுத்தேன். பார்வையற்றோருக்கு நல்ல கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே எனது லட்சியம்.
தரமான புத்தகங்களைப் படித்தாலும், பயிற்சி மைய வழிகாட்டுதலும் தேவை. நாம் தவறு செய்யும்போது பயிற்சி மையம்சுட்டிக்காட்டும். தமிழில் தேர்வு எழுதி வெல்ல முடியுமா என பிறரின் அச்சத்தைப் புறம் தள்ளி வெற்றி பெற்றுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி பதவிக்கான குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் 27, போலீஸ்  டிஎஸ்பி 90, வணிக வரித்துறை உதவி ஆணையர்-18. கூட்டுறவு சங்கம் துணைப்பதிவாளர்-13, மாவட்ட பதிவாளர்-7, ஊரகவளர்ச்சி துறை உதவி இயக்குநர்-15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்-8, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மாவட்ட  அலுவலர்-3 இடங்கள் என 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி நடந்தது. இத்தேர்வில் 2,29,438 பேர் பங்கேற்றனர். இதில் 9442 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 12, 13, 14ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முதன்மை தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஸ்சி தனது இணையதளம் www.tnpsc.gov.inல் வெளியிட்டது. இவர்களுக்கான மூலச்  சான்றிதழ்  சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு வருகிற 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை (25, 29ம் தேதி நீங்கலாக) நடைபெறுகிறது. வருகிற 27, 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடக்கிறது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: குரூப் 1 தேர்வு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற 3 நிலைகளை கொண்டது.
இதில், முதன்மை தேர்வை 9442 பேர் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 363 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இதில், 117 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்தவர்கள். முதன்மை தேர்வில் தேர்ச்சி  பெற்றவர்களுக்கு இலவச மாதிரி நேர்முக தேர்வு மற்றும் வகுப்புகள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் வருகிற 11ம் தேதி முதல் நடைபெற உள்ளது. குரூப் 1  நேர்முக தேர்வினை அச்சமின்றி எதிர்கொள்ள ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியில்  உள்ள அரசு உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழுவே இந்த மாதிரி நேர்முக தேர்வையும் வழிகாட்டு கருத்தரங்கையும் நடத்த உள்ளது. இதில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் 044-43533445, 044-45543082 என்ற எண்களில்  தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
டிஎன்பிஎஸ்சி கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிவிப்பில், இனிவருங்காலதில், தேர்வுக்கான முடிவுகள் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் வெளியிடப்படும். குருப் 1 பதவிக்கு நிலையான கால  அட்டவணை பின்பற்றப்படும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் (முதல் வாரம்) அறிவிப்பு வெளியிடப்படும், ஏப்ரல் மாதம்-முதனிலை தேர்வு, மே-முதனிலை தேர்வு முடிவு,ஜூலை-முதன்மை எழுத்து தேர்வு, நவம்பர்-முதன்மை  எழுத்துத் தேர்வு முடிவு, டிசம்பர் மாதம் (முதல் வாரம்)-நேர்முகத் தேர்வு, டிசம்பர் மாதம் (இறுதி வாரம்)கலந்தாய்வு, இறுதி முடிவுகள் வெளியிடப்படும். இதுதவிர, குரூப் 2, குரூப் 4ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகளும் வழக்கமாக  ஆண்டுதோறும் நடத்தப்படும். குரூப் 1 நிலையான கால அட்டவணையைப் போலவே குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கும் நிலையான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo