ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் முறை
இன்றைய சூழலில் நமது வாழ்வின் ஓர் தவிர்க்கவியலாத அங்கமாக ஸ்மார்ட்போன்கள் ஆகிவிட்டன நமது தினசரி வாழ்வின் நகர்வுகளான வங்கிக்கணக்குகள் பணப்பரிமாற்றம் முதற்கொண்டுஷாப்பிங் பயணம் சினிமா டிக்கெட் புக் செய்வது ஆகிய அனைத்துமே நமது ஸ்மார்ட்போன்களை மையப்படுத்தியே அமைந்துள்ளது.ஸ்மார்ட் போன் மூலம் இத்துணைப் பயன்கள் உள்ளபோதும் ஏதேனும் வலைத்தளத்தில் உள்ள நமது அக்கவுண்டின் தகவல்களை திருடுதல், ஹேக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது ஆகவே இதிலிருந்து உங்கள் ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் உங்கள் மொபைலின் திரையை லாக் பட்டன் கொண்டு லாக் செய்வதாலும் பின்,பேட்டர்ன் உள்ளிட்ட லாக் செய்யும் வாய்ப்புகளை பயன்படுத்துவதாலும் எதிர்பாராத சூழல்களின் போது உங்கள் மொபைல் தொலைய நேர்ந்தாலோ அல்லது பிறர் உங்கள் பர்சனல் தகவல்களை தெரிந்துகொள்ளாமலிருப்பதற்கு இந்த வழிமுறை உதவும்.என்க்ரிப்ட்(தகவல்களை மறைத்தல்) என்கிற இந்த வசதியானது உங்கள் போனிலிலுள்ள தகவல்களை வேறுயாரேனும் அறிந்திட வண்ணம் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். ஆண்ட்ராய்டு போன்கள் தானாகவே என்க்ரிப்ட் செய்துகொள்ளும் மேலும் இரு வகைகளில் தகவல்களை என்க்ரிப்ட் செய்யலாம் போன் முழுமையையும் என்க்ரிப்ட் செய்கிற வசதியானது ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் உள்ளிட்டவற்றில் உள்ளது குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் என்க்ரிப்ட் செய்யும் வசதியானது ஆண்ட்ராய்டு 7.0, நௌவ்கட்(nougat)உள்ளிட்டவற்றில் உள்ளது.ஸ்மார்ட்போனில் நமது தேவைகளுக்காக பல செயலிகளை தரவிறக்குகிறோம் அவ்வாறு தரவிறக்குகையில் நமது போனிலுள்ள எந்தெந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என அனுமதி கேட்கப்படும்.அவ்வாறு கேட்கப்படுகையில் நம் தேவையானவற்றை மட்டம் பகிர்ந்து கொண்டால் போதுமானது அவ்வாறில்லாமல் நமது பர்சனல் தகவல்களும் பகிந்துகொள்ளபடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் எனவே செயலிகளை தரவிறக்குதலின் பொது கவனம் தேவை.போனில் திரையை லாக் செய்யும் வசதியைக் கடந்து நமது சுய தகவல்கள் அதிகம் அடங்கிய சமூக வலைத்தள கணக்குகள், மொபைல் பாங்கிங் ஆஃப்ஸ்கள் (mobile banking apps) போன்றவற்றை நம் பின், பேட்டர்ன் போன்றவற்றின் வாயிலாகவும் லாக் செய்யலாம் நமது சுய தகவல்களை பாதுகாக்க இது உதவும்.தேவையான செயலிகளை ஏனைய இணைய தளங்களில் இருந்து இன்ஸ்டால் செய்துகொள்வதனை விட கூகுள் பிளே ஸ்டோரின் வாயிலாக இன்ஸ்டால் செய்துகொள்வது பாதுகாப்பானது.அவ்வாறு இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை நமக்கு தேவையானவாறு போனிலுள்ள ஆப்ஸ் மேனேஜர் போன்ற வசதிகளின் மூலம் நிர்வகிக்கலாம்.இத்தகைய வசதியின் மூலம் டூ ஸ்டெப் அத்தேன்டிகேஷன் (two step authentication) பின், பேட்டர்ன், கைரேகை முறைகளைக் கடந்தே நமது போனை உபயோகிக்க முடியும். இந்த வசதியானது ஏற்கனவே பேங்க் அக்கௌன்ட் ஆப்ஸ் சமூக வலைதளங்கள் போன்றவற்றில் நடைமுறையில் உள்ளது பயனளிக்கக்கூடிய ஒன்று மேற்காண் வழிமுறைகளை பின்பற்றி நமது போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்
முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்