Onetamil News Logo

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மண் வள தினம் கொண்டாட்டம் நடைபெற்றது

Onetamil News
 

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மண் வள தினம் கொண்டாட்டம் நடைபெற்றது


தூத்துக்குடி டிசம்பர் 6 ; தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மண் வள தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. 
இயற்கை வளங்களில் மண் வளம் பெரிதும் இன்றியமையாதது மட்டுமல்லாமல் மனிதர்களுக்குத்தேவையான உணவு உற்பத்தி,நீர் ஆதாரம் மற்றும் அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருப்பதால் உலகம் முழுவதும் டிசம்பர் 5ம் நாள் மண் வளதினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு புதுடெல்லியில் உள்ள இந்தியவேளாண் ஆராய்ச்சிக்கழகம் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மண் வளநாள் 06.12.2017 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை நீர்வளச் சூழலியல் துறை மற்றும் மீன்வளர்ப்புத் துறை இணைந்து நடத்தியது. இதன் துவக்க விழாவில்,முனைவர் பா. பத்மாவதி, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்,நீர்வளச் சூழலியல் துறை வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ.சுகுமார்  தனது தலைமை உரையில் மண் வள தினத்தின் முக்கியத்துவம் மற்றும் மீன்வளர்ப்பில் மண் வளத்தின் பங்குபற்றி விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரஞ்சித் மேன்லி, இறால் பண்ணையாளர் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகசிறப்புவிரிவுரையாளர்   “இறால் வளர்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளுக்கானதீர்வுகள் மற்றும் மீன்வளர்ப்பில் புரோபயோட்டிக்ஸின் பங்கு”என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் மீன்வளர்ப்புத் துறையின் தலைவர் முனைவர் இராஜகோபால்சாமி  “பயோபிளாக்முறையில் மீன்வளர்ப்பு”என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 12 மீன் பண்ணையாளர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நீர்வளச் சூழலியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் வே.ராணி  நன்றியுரை நல்கினார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo