சூலூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டி.டி.வி. தினகரன் பேச்சு
சூலூர் 2019 மே 9 ;சூலூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டி.டி.வி. தினகரன் பள்ளபாளையம் பகுதியில் பிவி.சம்பத் அமுமுக பேரூராட்சிக் கழகச் செயலாளர் தலைமையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கொங்கு மண்டலம் துரோகத்திற்கு துணை நிற்காது என்பது எனக்கு தெரியும். சசிகலா கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் இருக்கட்டும் என்று பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுத்தாரகள்.
சசிகலா நினைத்திருந்தால் என்னை முதல்வராக தேர்வு செய்திருக்கலாம். ஆனால் பதவிக்காக நாங்கள் ஆசைபடுபவர்கள் இல்லை. பாஜகவின் ஏஜெண்டாக இருந்ததால் ஓ.பி.எஸ். ஐ நீக்கினோம்.
அதன் பிறகு கொங்கு மண்டலத்தை சேர்ந்தவரை முதல்வராக்கினோம். பதவியில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என அவர்கள் செய்தது ராஜ தந்திரமா அதனை மக்கள் ஏற்பார்களா?
எடப்பாடி தவிழ்ந்து வந்து பொதுச்செயலாளர் சசிக்கலா காலில் விழுந்தது ஏன்? பழனிச்சாமியின் பதவி வெறி காரணமாகத்தான் இடைத்தேர்தல் வந்தது. அம்மா பழனிச்சாமியை அமைச்சராக்கினார் , ஆனால் சசிகலா முதல்வராக்கினார்.
சிறையில் உள்ளவருக்கு துரோகம் செய்துள்ளாரே ,இவரா நாட்டிற்கு நல்லது செய்யப்போகிறார். துரோகத்திற்கு துணை போக மாட்டோம் என நிரூபிக்க சூலூர் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
மறைந்த ஜெயலலிதா யாருடன் எல்லம். கூட்டணி வேண்டாம் என நினைத்தாரோ அவர்களுடனெல்லாம் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளனர். லேடியா மோடியா என கேட்டதால்தான் மோடி அப்போலோவில் அம்மாவை பார்க்க வரவில்லை. வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால்தான் நம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை நீக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்களை குறைத்து சட்ட பொந்துகளின் மூலம் முதல்வராக இருப்பது ஏற்புடையதல்ல.
வடக்கில் இருந்து வருவபர்களுக்கு பயப்பட மாட்டோம் அதிகாரத்திற்கு அஞ்ச மாட்டோம்.உயர் மின் கோபுரம் , எட்டு வழிச்சாலை என விவசாயிககை இந்த அரசு வஞ்சித்துள்ளது. ஆனால் தன்னை விவசாயி என்கிறார் பழனிசாமி. இவ்வாறு அவர் பேசினார்.