Onetamil News Logo

தூத்துக்குடி அருகே பழையகாயல் கடலோர  மீனவ குடும்பங்களுக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Onetamil News
 

தூத்துக்குடி அருகே பழையகாயல் கடலோர  மீனவ குடும்பங்களுக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தூத்துக்குடி டிசம்பர் 6 ; ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழையகாயல் கடலோர 200 மீனவ குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தன் சொந்த செலவில் நலத்திட்ட உதவி மற்றும் நிவாரணத்தொகை வழங்கினார். 
                                      
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி பழையகாயல் கடலோர மீனவ குடும்பங்கள் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 
                                                   
  இதனை தொடர்ந்து மீனவர்கள்  அதிகமாக வசிக்கும் பகுதிகளான பரிபூரண நகர், தாமஸ் நகர், அன்னை தெரேசா நகர், கணேஷ் நகர், ஆகிய பகுதிகளில் உள்ள 200 மீனவ குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தன் சொந்த செலவில் 1 1/2 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரணத்தொகை வழங்கினார். 
                                             
 இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அருள்தாமஸ் பயாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சி வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்க வாசகம், ஆர்.முத்துக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியகுழு முன்னாள் தலைவர் ஆறுமுகநயினார், செவத்தையாபுரம் விவசாய சங்க தலைவர் குணசேகரன், ஊராட்சி கழக செயலாளர்அழகேசன் பங்கு தந்தை சகாயராஜ், ஊராட்சி செயலாளர் டி.சாந்தா, துறைமுக கமிட்டி தலைவர் ராஜன், பழையகாயல் ஊர் தலைவர் அந்தோணி பிச்சையா, முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் செல்வகுமார்,  ஊராட்சி செயலாளர் வினோத், மற்றும் சம்பத்ராஜ், டார்வின், இருதயராஜ், ராஜா, ஜஸ்டின், வெள்ளத்தாய், உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo