Onetamil News Logo

வருகிற சனிக்கிழமை 23ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு திருத்தம் தொடர்பாக தூத்துக்குடியில் சிறப்பு முகாம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்

Onetamil News
 

வருகிற சனிக்கிழமை 23ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு திருத்தம் தொடர்பாக தூத்துக்குடியில் சிறப்பு முகாம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்


தூத்துக்குடி 2021 அக்டோபர் 20;  தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வருகிற 23ம் தேதி (சனிக்கிழமை) குடும்ப அட்டை தொடர்பான முகாம் நடைபெறுகிறது.
           தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் ஏற்பாட்டின்படி தூத்துக்குடி டூவிபுரம் 8வது தெருவில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வருகிற 23ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் காலை 10.00 மணி முதல் 2 மணி வரை (குடும்ப அட்டை) ஸ்மார்ட் கார்டுகளில் புகைப்பட மாற்றம், செல்போன் நம்பர் மாற்றம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo