Onetamil News Logo

நாணயங்களும் நாடுகளும் சிறப்பு சொற்பொழிவு

Onetamil News
 

நாணயங்களும் நாடுகளும் சிறப்பு சொற்பொழிவு



திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் நாணயங்களும் நாடுகளும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
 திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நாணயவியல் சேகரிப்பாளர் அசோக் காந்தி முன்னிலை வகித்தார். நாணயங்களும் நாடுகளும் தலைப்பில் முகமது சுபேர் பேசுகையில்,
நாணயம் (Currency) என்பது பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு "பரிமாற்ற அலகு" ஆகும். பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமும், பெறுமானத்தைத் தன்னுள் அடக்கியுள்ள ஒன்றும் ஆகையால், நாணயமும் பணத்தின் ஒரு வடிவம் ஆகும்.
  ஒவ்வொரு நாடும் தனது நாணயத்தின் உற்பத்தியிலும் வழங்கலிலும் தனியுரிமை கொண்டுள்ளன. இவ்வாறு வெவ்வேறு நாணயங்களைக் கொண்ட நாடுகளிடையே வணிகத்துக்கு உதவுவதற்காக நாணய மாற்று விகிதங்கள் உள்ளன. இவ்விகிதங்கள் ஒரு குறிப்பிட்ட நாணயம் பிற நாணயங்களுக்கு எதிராக என்ன பெறுமதியைக் கொண்டுள்ளது என்பதை முடிவு செய்ய உதவுகிறது. அவை பயன்படுத்தும் நாணய மாற்றுவிகித முறையைப் பொறுத்து நாணயங்கள்  வகைப்படுத்தப்பட்டுள்ளன என 200 நாடுகளின் நாணயங்களை காட்சிப்படுத்தி விளக்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo