வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா, தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி, பங்கேற்பு
தூத்துக்குடி 2022 ஜூன் 26 ;தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விளையாட்டு விழாவிற்கு தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தலைமை தாங்கி மாணவர்கள் தங்கள் கல்வி கற்கும் பொழுதே உடற்பயிற்சி, பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள அன்போடு வழியுறுத்தினார். கல்லூரி திட்டமிடல் மேம்பாட்டு பேராசிரியர் ஜார்ஜ் கிளிங்டன், வரவேற்புரை ஆற்றினார். மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் விளையாட்டு விழாவில் கலந்துகொண்டனர்.
உடற்கல்வி ஆசிரியர் ஞானமுத்துராஜ்,கல்லூரியின் விளையாட்டு அறிக்கையை வாசித்தார். பேராசிரியர் கே.எம். முத்துக் கிருஷ்ணனன் நன்றியுரை ஆற்றினார்.