Onetamil News Logo

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்(55 ) திடீர் மரணம் ;பரபரப்பு 

Onetamil News
 

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்(55 ) திடீர் மரணம் ;பரபரப்பு 


இலங்கை 2020 மே 26 ;இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (29 மே 1964) ம் ஆண்டு பிறந்து இன்று சற்று முன்னர் இயற்கை எய்தினார்.  இவர் முன்னாள் அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட உறுப்பினரும் ஆவார்.
ஆறுமுகன் தொண்டமான் 1990ம் ஆண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993 ஆம் ஆண்டு  நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். தற்போதைய அரசாங்கத்தின் மிகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அமைச்சர் ஆறுமுகன் தனது 55 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo