Onetamil News Logo

பாசிக்குடா முனைமுருகன் கோவில் பகுதியில் 50 வருடங்கள் பழமையான ஆலமரத்தின் கிளைகள் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டன 

Onetamil News
 

பாசிக்குடா முனைமுருகன் கோவில் பகுதியில் 50 வருடங்கள் பழமையான ஆலமரத்தின் கிளைகள் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டன 


மட்டக்களப்பு  2019 அக்டோபர் 13 ;இலங்கை நாட்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா முனைமுருகன் கோவில் பகுதியில் பாசிக்குடா முனைமுருகன் ஆலயத்திலிருக்கும் 50 வருடங்கள் பழமையான ஆலமரத்தின் பாரிய கிளைகளை ஆலயத்தின் தலைவரினால் யாரிடமும்  எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டப்பட்டுள்ளது.இம்மரமானது கடற்கரையிலிருந்து 50 மீற்றருக்கும் குறைவான தூரத்திலேயே உள்ளதோடு சுற்றுளாத்தலமான பாசிக்குடாவில் காணப்படும் பழமை வாய்ந்த ஆறு மரங்களில் இம்மரமும் ஒன்றாகவுள்ளது.
இம்மரமானது கடற்கரைக்கு அழகு சேர்க்கும் மரம் மட்டுமல்லாது முனைமுருகன் ஆலயப்பக்தர்கள் தொடக்கம் சுற்றுலாப் பயணிகள் வரை ஓய்வெடுத்து, களைப்பாற  நிழல் கொடுத்த இம்மரத்தை வெட்டுவதற்கு நிருவாக சபையிடமோ  பொதுக்கூட்டம் கூட்டியோ அனுமதி பெறாமல் வெட்டப்பட்டது  அப்பிரதேச மக்களிடையே பெரும் விசனத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. 
தேசிய மரநடுகை மாதமாக வருடாந்தம் ஒக்டோபர் மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும் இம்மாதத்தில் இவ்வாறான செயற்பாட்டினை யாருடைய அனுமதியுமின்றி முனைமுருகன் ஆலயத்தலைவர் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo