Onetamil News Logo

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் நாவிதன்வெளிப் பிரதேச செயலகம் ,கலை மன்றங்கள் இணைந்து நடத்தும் பிரதேச கலை இலக்கிய விழா-2019

Onetamil News
 

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் நாவிதன்வெளிப் பிரதேச செயலகம் ,கலை மன்றங்கள் இணைந்து நடத்தும் பிரதேச கலை இலக்கிய விழா-2019


நாவிதன்வெளிப் பிரதேசசெயலகம்  2019 டிசம்பர் 27 ;கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் நாவிதன்வெளிப் பிரதேச செயலகம் ,கலை மன்றங்கள் இணைந்து நடாத்தும் பிரதேச கலை இலக்கிய விழா-2019 நடந்தது.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 
நாவிதன்வெளிப் பிரதேசசெயலகத்தில் 27-12-2019 இன்று நடைபெற்ற பிரதேச கலை இலக்கிய விழாவானது காலை 9.30 மணியளவில்  நாவிதன்வெளிப் பிரதேச செயலக உதவிப்  பிரதேசசெயலாளர் ந.நவநீதராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 
இந்நிகழ்வில்  முதல் நிகழ்வாக மாலையணிவித்து அதிதிகளை வரவேற்கும் முகமாக கோலாட்டம், பொல்லடி நிகழ்வின் போது அழைத்து வரப்பட்டார்கள்.
பிரதம அதிதிகளாக  மாவட்ட உத்தியோகஸ்தர் வி.ஜெகதீஸ்சன் ,பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், கணக்காளர் ஜனாப்.யு.எல்.ஜவாஹிர், நிர்வாக உத்தியோகஸ்தர் கி.யோகேஸ்வரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் அம்பாரை ஜனாப் ரி.எம்.றிமசான், பிறை எப்.எம். நிலையக் கட்டுப்பாட்டாளர் ஜனாப்.அல்.ஹாஜ் பஸீர்.அப்துல்.கையூம்  அவர்களும் கலந்து சிறப்பித்த்கார்கள்.
இந்நிகழ்வின் போது பிரதேச கலை மன்றங்களினால் பல கலை நிகழ்ச்சிகளும்   இடம்பெற்றது. அப்போது நாவிதன்வெளிப் பிரதேசத்தில் முதல் முறையாக நூல் வெளியீடு செய்த எழுத்தாளர் வை.கே.ராஜூ அவர்களுக்கு பாராட்டுதலும், பிரதேச மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டார்கள். 
இந்நிகவுகள் அனைத்தையும் நாவிதன்வெளிப் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்  ஏ.எல்.எம்.ஸினாஸ் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத் தக்க விடயமாகும்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo