Onetamil News Logo

பேட்மாநகரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நல்லிணக்க பேரணி  

Onetamil News
 

பேட்மாநகரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நல்லிணக்க பேரணி  


 ஸ்ரீவைகுண்டம். பிப்.17: பேட்மாநகரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நல்லிணக்க பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட,பேட்மாநகரம், சுற்றுவட்டார ஜமாத் மற்றும் இயக்கங்கள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை திரும்பபெறவேண்டியும், தமிழகத்தில் என்.ஆர்.சி., சி.ஏ.ஏ., என்.பி.ஆர். போன்ற சட்டங்களை நடைமுறை படுத்தமாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும்  நல்லிணக்கபேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், பேட்மாநகரம் முகைதீன் ஜாமியா மஸ்ஜீத் இமாம் பஷீர் அகமது பைஜி, தூத்துக்குடி அரபிக்கல்லூரி பேராசிரியர் முகம்மது முஸ்தபா மஸ்லஹி, திராவிடர் விடுதலை கழக பரப்புரை செயலாளர் பால்பிரபாகரன், அய்யாவழி தர்மயுக பேரவை தலைவர் பாலமுருகன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் முஹம்மது உசேன், நாகர்கோவில் கலாச்சார பள்ளிவாசலின் தலைமை இமாம் சௌகத்அலி உஸ்மானி,  கிறிஸ்தவர் வாழ்வுரிமை மாநில அமைப்பாளர் சுந்தரிமைந்தன், தமுமுக மாநில துணை தலைவர் கோவை செய்யது ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
பொதுக்கூட்டத்தில், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை திரும்பபெறவேண்டும், தமிழகத்தில் என்.ஆர்.சி., சி.ஏ.ஏ., என்.பி.ஆர். போன்ற சட்டங்களை நடைமுறை படுத்தமாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்,சென்னை வண்ணார்பேட்டையில் ஜனநாய அடிப்படையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்தல் நடத்திய காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பது, காவல்துறையினரின் தடியடி தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்கவேண்டும். மேலும், போரட்டத்தில் பங்குபெற்ற மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறவேண்டும். தடியடி சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்திடவேண்டும்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் பொதுஅமைதிக்கு எதிராக பேசிவரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், ஜமாத் மற்றும் இயக்கங்களின் நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் திரளாக கலந்துகொண்டனர். பொதுக்கூட்டம் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இதற்கிடையே இந்த நல்லிணக்கபேரணி மற்றும் பொதுக்கூட்டம் காரணமாக பேட்மாநகரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo