Onetamil News Logo

ரத்த தானம் செய்வதால் உடலுக்கு கெடுதல் ஏற்படுவதில்லை..! அரசு மருத்துக்கல்லூரி ரத்த வங்கி மருத்துவர் சாந்தி தகவல்..!!

Onetamil News
 

ரத்த தானம் செய்வதால் உடலுக்கு கெடுதல் ஏற்படுவதில்லை..! அரசு மருத்துக்கல்லூரி ரத்த வங்கி மருத்துவர் சாந்தி தகவல்..!!


ஸ்ரீவைகுண்டம்: 2019 ஆகஸ்ட் 16 ;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மூன்றுமாதகால தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆறாம்பண்னை கிளையும், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியும் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் ஆறாம்பண்ணை மர்கஸில் நடைபெற்றது.
முகாமிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ரஷீத்காமில், மாவட்ட துணைச்செயலாளர் சிக்கந்தர், கிளைத்தலைவர் அப்துல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச்செயலாளர் அப்ரிதீன் வரவேற்றார். முறப்பநாடு சப்&இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில், தூத்துக்குடி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் சாந்தி பேசியதாவது, தானத்தில் எத்தனையோ இருந்தாலும் ரத்த தானம் செய்வது தான் தானத்திலேயே மிகச்சிறந்த தானமாகும். ரத்த தானம் செய்வதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பானது கடந்த 13வருடங்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்று தன்னார்வலர்களும், பிறஅமைப்புகளும் ரத்ததானம் செய்வதற்கு முன்வந்திடவேண்டும்.
பொதுவாக 18வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தாராளமாக ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்பவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்த பிறகே, தகுதியான அவரிடம் இருந்து ரத்தம் எடுக்கப்படுகிறது.

ரத்த தானம் செய்தால் உடம்பில் ரத்த அளவு குறைந்து விடும், உடல் எடை குறைந்து சோர்வு ஏற்பட்டு விடும் என்பது போன்ற தவறான மூடநம்பிக்கை மக்கள் மத்தியில் இப்போதும் இருக்கிறது. இது தான் சமூகத்தில் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும். 
ரத்த தானம் செய்வதால் ஏற்படும் பயன்கள் குறித்த தகவல்களை மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு மூலமாக ஏற்படுத்திடவேண்டும். இப்பணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.
ரத்த தானம் செய்வதால் உடலுக்கு எந்தவிதமான கெடுதலும் ஏற்படுவதில்லை. இருந்தாலும் மக்கள் மத்தியில் ரத்த தானம் தொடர்பான தவறான எண்ணங்கள் இருக்கிறது. இதனை நாங்கள் விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலமாக மாற்றி வருகிறோம். ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு அனைத்து மக்களிடமும் ஏற்படவேண்டும். ரத்த தானம் குறித்த தகவல்களை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் அரசு ரத்த வங்கி, அரசு மருத்துவர்களை அணுகி பெற்று பயன்பெறலாம் என்றார்.
ரத்த தான முகாமில், பெண் உட்பட 50பேர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். முகாம் முடிவில் மொத்தம் 50யூனிட் ரத்தம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில், ஆறாம்பண்ணை கிளைப்பொருளாளர் அக்பர்ஷா, துணைச் செயலாளர் முஸம்மில், துணைத்தலைவர் காசிம், மருத்துவர் அணி செயலாளர் செய்யது, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மருத்துவப் பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாணவர் அணி செயலாளர் அல்தாப் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo