Onetamil News Logo

ஊர்வசி அமிர்தராஜ் ஏற்பாட்டின் பேரில் ஸ்ரீவைகுண்டத்தில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்கப்பட்டது. 

Onetamil News
 

ஊர்வசி அமிர்தராஜ் ஏற்பாட்டின் பேரில் ஸ்ரீவைகுண்டத்தில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்கப்பட்டது. 


ஸ்ரீவைகுண்டம்,  2020 மே 23 ;ஊர்வசி அமிர்தராஜ் ஏற்பாட்டின் பேரில் ஸ்ரீவைகுண்டத்தில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்கப்பட்டது.       
தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஏற்பாட்டின் பேரில் சாயர்புரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் மற்றும் ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் பகுதிகளிலுள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசிஅமிர்தராஜ் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற காங்கிரஸ் கொறடா மாணிக்கதாகூர் எம்.பி., சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது, ஊரடங்கு உத்தரவு காலத்தில் மத்திய அரசு வட்டிக்கடைக்காரன் போல எண்ணி எண்ணி மாநிலங்களுக்கு பணம் கொடுப்பதால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசானது மக்கள் வேலையில்லாமல் பரிதவித்து வரும் நிலையில் 100நாள் வேலை திட்டம் போன்ற மக்களுக்கு வேலை தரும் திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்தவில்லை. இதனால் மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் உதவி வருகிறோம்.
கொரோனா காலத்தில் கூட அரசியல் பழிவாங்கும் போக்கில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிகாலை நேரத்தில் பிஜேபியின் பினாமி அரசாக செயல்படும் அதிமுக அரசால் கைது  செய்யப்பட்டுள்ளது எடப்பாடி ஹிட்லர் போல செயல்படுவதை வெளி காட்டுகிறது.
ஆர்.எஸ்.பாரதி என்ன சொன்னார், அவர் சொன்ன விதம் என்ன என்பதை யோசிப்பதற்குள் பிஜேபியின் கண்ணசைவில் எடப்பாடி அரசு அவரை கைது செய்துள்ளதை பார்க்கும்போது அதிமுக அரசு பிஜேபியின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. ஆர்.எஸ்.பாரதி அரசியல் பழிவாங்கும் போக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும் என்றார்.

இதில், தெற்குமாவட்ட தலைவர் ஸ்ரீராம், துணைத்தலைவர்கள் சீனிராஜேந்திரன், ராஜவேல், வட்டார தலைவர் நல்லக்கண்ணு, நகர தலைவர் சித்திரை, ஐ.என்.டி.யு.சி.சந்திரன், சிவகளைபிச்சையா, துணைத்தலைவர் மதிசேகரன், வார்டு தலைவர் வில்லவராயர், செய்தி பிரிவு முத்துமணி, மரியராஜ், வட்டார துணைத்தலைவர் அலங்காரபாண்டி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo