Onetamil News Logo

ஸ்ரீவை.,யில் கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கட்ட நிதி ஒதுக்கீடு 

Onetamil News
 

ஸ்ரீவை.,யில் கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கட்ட நிதி ஒதுக்கீடு 


தூத்துக்குடி 2019 ஜூலை 12 ;ஸ்ரீவைகுண்டத்தில் ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நீதிமன்றத்தில் போதுமான இடவசதி இல்லாத நிலையில் புதியதாக நீதிமன்ற கட்டிடம் கட்டவேண்டும் என்று வழக்கறிஞர்கள் ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பெருமாள் பிரபு, செயலாளர் சங்கரலிங்கம் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மூலமாக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 
இந்த கோரிக்கையின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.5கோடியே 9லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதியதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. 
புதிய கட்டிடம் கட்டும் பணிகளை துரிதமாக துவங்கிடக்கோரி கவுரவ ஆலோசகர் ஆறுமுகப்பெருமாள் ஆலோசனையின்பேரில், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பெருமாள் பிரபு, செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் வழக்கறிஞர்கள் தமிழக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் துறைசார்ந்த அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சரும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சண்முகநாதன் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இதன்அடிப்படையில், தமிழக அரசானது ஏற்கனவே அறிவித்தபடி ஸ்ரீவைகுண்டத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு ரூ.5.09கோடியும் மற்றும் புதியதாக கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கட்டுவதற்கு ரூ.1.09கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு உத்தரவால் வழக்கறிஞர்கள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் சங்க தலைவர் பெருமாள்பிரபு, செயலாளர் சங்கரலிங்கம் ஆகியோர் கூறியதாவது, ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டிடம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது. இதனை நிவர்த்தி செய்திடும் பொருட்டு புதிய நீதிமன்ற கட்டிடங்களை கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வழக்கறிஞர்களின் தேவைகளை நிறைவேற்றுதற்கான அனைத்து பணிகளையும் திறம்பட மேற்கொள்வோம் என்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo