Onetamil News Logo

பொதுச் சுவர் எழுப்புவதில் தகராறு ; குற்ற வழக்கும் இல்லாத வாலிபர்கள் மீது போலீஸ் எஸ்.ஐ பெருமாள் கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டதாக வாலிபர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி ;பரபரப்பு

Onetamil News
 

பொதுச் சுவர் எழுப்புவதில் தகராறு ; குற்ற வழக்கும் இல்லாத வாலிபர்கள் மீது போலீஸ் எஸ்.ஐ பெருமாள் கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டதாக வாலிபர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி ;பரபரப்பு 


தூத்துக்குடி 2020 மே 29 ;பொதுச் சுவர் எழுப்புவதில் தகராறு ; குற்ற வழக்கும் இல்லாத வாலிபர்கள் மீது போலீஸ் எஸ்.ஐ பெருமாள் கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டதாக வாலிபர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 
ஸ்ரீவைகுண்டம்  அருகே ஆயத்துறையில் மதில் சுவர் கட்டியதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக  எஸ்.ஐ பெருமாள் சென்று 3 வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று சித்ரவதை செய்ததாக  அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
ஆயத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ்  (53). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சுந்தரி (37). இரு வீட்டினருக்கும், வீட்டுமனை பொதுச் சுவர் கட்டும் போது  பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  காமராஜ் பொது  சுவர் கட்டினாராம். இதனை சுந்தரி  தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கணவனை இழந்த பெண் சுந்தரிக்கு ஆதரவாக ஜெயராஜ் என்பவர் ,காமராஜ்   மகன் ராஜ்குமாரை அடித்து தாக்கிவிட்டாராம் அதன் பின்னர் சுந்தரிக்கு ஆலோசனை வழங்கி கையை பிடித்து இழுத்ததாக புகார் கொடுத்துள்ளார்.  இந்த புகாரை விசாரிக்க வந்த போலீஸ் எஸ்.ஐ பெருமாள்  ஆயத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ்   மகன்கள்  கனகராஜ்  (25), சாந்தகுமார்  (24), ராஜ்குமார்  (20) ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரது மகன்களை  போலீஸ் எஸ்.ஐ பெருமாள் தலைமையில் போலீசார் பலமாக சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காமராஜ்   மகன்கள்  கனகராஜ்  (25), சாந்தகுமார்  (24), ராஜ்குமார்  (20)  ஆகியோர் காயமடைந்தார்கள்.இந்த நிலையில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக சேர்ந்துள்ளார்.இவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லாத நிலையில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டதாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo