Onetamil News Logo

மணக்கரை காளிமார்க் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொழுநோய் கண்டறியும் முகாம் மற்றும் சித்த மருத்துவ சிறப்பு முகாம்

Onetamil News
 

மணக்கரை காளிமார்க் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொழுநோய் கண்டறியும் முகாம் மற்றும் சித்த மருத்துவ சிறப்பு முகாம்


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 14 ;மணக்கரை காளிமார்க் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொழுநோய் கண்டறியும் முகாம் மற்றும் சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மரு கிருஷ்ணலீலா அவர்களின் உத்தரவின்பேரில் வல்லநாடு வட்டார மருத்துவ அலுவலர் மரு சுந்தரி அவர்களின் ஆலோசனை பேரில் மணக்கரை யில் உள்ள காளிமார்க் தொழிற்சாலையில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
இதில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் மரு செல்வகுமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நலக் கல்வியாளர் திரு அந்தோணிசாமி  அவர்கள் தலைமை வகித்தனர், வல்லநாடு  வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு பெரியசாமி மற்றும் வட்டார  மருத்துவமல்லா  மேற்பார்வையாளர் திரு இளங்கோ ராஜன் அவர்கள் முன்னிலை வகித்தனர் ,காளிமார்க் மனித வள மேலாண்மை மேலாளர் திரு லட்சுமி நாராயணன் அனைவரையும் வரவேற்றார்

மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு இளங்கோ ராஜன் கூறுகையில், உடலில் உணா்ச்சி அற்ற தழும்பு, தேமல், சிவந்த தேமல், கைகளில் சூடு தெரியாமல் உணா்ச்சி அற்று இருப்பது போன்றவை தொழுநோயின் அறிகுறியாகும். இந்த நோய்க்கு தற்காலத்தில் நல்ல மருந்துகள் சிகிச்சைகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. நோய் குறியீடுகளை ஆரம்ப காலத்திலேயே நோயாளி கண்டறிந்தால், அவா்களை 100 சதவீதம் கட்டாயம் குணப்படுத்த முடியும். எனவே நோயாளிகளை அவா்களது உறவினா்கள் அரசு மருத்துவமனைகளில் சோ்த்து தூத்துக்குடி மாவட்டத்தை தொழுநோய் அற்ற மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
சித்த மருத்துவர் மரு செல்வகுமார் பேசியதாவது, இன்றுள்ள காலகட்டத்தில் நோயில்லாத மனிதர்களை காண்பதே அரிது என்ற நிலை  உருவாகி விட்டது.  மண்ணுக்கு ஏற்ற உணவு என்ற நமது முன்னோர்களின் வாழ்க்கை தத்துவ அடிப்படையில் வந்தது தான் சித்த மருத்துவம்.  இந்த வாழ்க்கை தத்துவத்தின் அடிப்படையில் வந்தது தான் ''உணவே மருந்து மருந்தே உணவு'' என்பதாகும்.
நாம் ஆரோக்கியமாக நோயின்றி வாழ்ந்திட பழைய பாரம்பரிய முறைப்படி உடல் உழைப்புடன், சத்தான இயற்கை உணவுகளை உண்பதற்கு முன்வரவேண்டும். ''உணவே மருந்து மருந்தே உணவு'' என்ற வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்து வாழ்ந்தால் தான் நோயின்றி நலமாக வாழலாம் என்றார்.

முன்னதாக சித்த மருத்துவ மூலிகைகளின் பயன்கள் குறித்து சிறப்பு கண்காட்சி மூலமாக விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு பெரியசாமி அவர்கள் கூறியதாவது கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகையான வைரஸ் கிருமியாகும். சீனாவில் உள்ள வூகான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் அறிகுறிகள் கண்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் திரவங்கள் மூலம் நோய்கள் பரவுகிறது. எனவே, வாய் மற்றும் மூக்கை  துணியால் மூடிக் கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் துடைத்து பராமரிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவேண்டும்.  இளநீர், கஞ்சி போன்ற நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை பருக வேண்டும். சளி- இருமல் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வது, விழாக்களில் பங்கேற்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இறுதியில்  சுகாதார ஆய்வாளர் திரு வைகுண்டத்தான் அனைவருக்கும் நன்றி கூறினார் இம்முகாமில்  சுகாதார பணியாளர்கள்  மற்றும் காளிமார்க் தொழிற்சாலையில்  உள்ள பணியாளர்கள் அனைவரும்  கலந்து கொண்டனர் இன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வல்லநாடு சுகாதார ஆய்வாளர் சாகிர் செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo