Onetamil News Logo

கல்வித்தந்தை’ ஊர்வசி செல்வராஜ் பிறந்தநாள் விழா-முககவசம் வழங்கி அசத்தல்..!!

Onetamil News
 

கல்வித்தந்தை’ ஊர்வசி செல்வராஜ் பிறந்தநாள் விழா-முககவசம் வழங்கி அசத்தல்..!!


ஸ்ரீவைகுண்டம்:,2020 செப்  19 ; ‘ஸ்ரீவைகுண்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசிசெல்வராஜ் பிறந்தநாள் விழா மரக்கன்றுகள், முககவசம் மற்றும் மதிய உணவு வழங்கி சிறப்பாக  கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், கல்வித்தந்தையுமான ஊர்வசிசெல்வராஜின் 70வது பிறந்தநாள் விழா ஸ்ரீவைகுண்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தலைவர் நல்லக்கண்ணு தலைமை வகித்தார். ஐ.என்.டி.யு.சி மண்டல துணைத்தலைவர் சந்திரன், ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் தலைவர் சித்திரை, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பிச்சைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வட்டார மகளிர் அணி தலைவி பஞ்சவர்ணம் வரவேற்றார்.
விழாவினை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் மேடைப்பிள்ளையார் கோவில் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ‘கல்வித்தந்தை’ ஊர்வசிசெல்வராஜ் உருவப்படத்திற்கு வட்டாரத்தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு 70மரக்கன்றுகள், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஆயிரத்து 200முககவசங்கள் மற்றும் 700பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராம், மாவட்ட துணைத்தலைவர் சீனிராஜேந்திரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை, செயலாளர் இசைசங்கர், மாதார், சொரிமுத்து, பேச்சிமுத்து, வழக்கறிஞர் பெலிக்ஸ், மகளிரணி செயலாளர் ஆவுடையம்மாள், மாநில பேச்சாளர் ராஜவேல், சிவகளை வார்டு உறுப்பினர் சிவகளைபிச்சையா,  நகர துணைத்தலைவர்கள் கண்ணன், மதிசேகரன், வட்டார துணைத்தலைவர் அலங்காரபாண்டியன், நகர இளைஞர் காங்கிரஸ் அருணாச்சலம், துணைத்தலைவர் மகாராஜன், மாற்றுத்திறனாளிகள் பிரிவு அருள்ராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo