Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஸ்ரீவைகுண்டம், ஜூலை 16 ;ஸ்ரீவைகுண்டத்தில் குருசுகோயில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனிதசந்தியாகப்பருக்கு 1938ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையில் ஆலயம் எழுப்பப்பட்டது.
ஆலயம் கட்டப்பட்டு 82 ஆண்டுகளாக ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக கொரோனா தொற்று நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாலும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதாலும் மக்களுக்காக மக்கள் இல்லாமல் திருவிழா கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு  நேற்று (16ம்தேதி) ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில் ஆலயத்தில் காலை 5.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது.
 இதனைதொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் மாலை 6.30 மணிக்கு சிறப்பு கொடிகளை மந்திரித்து ஸ்ரீவைகுண்டம் குருசு கோயில் ஆலய பங்குதந்தை கிஷோக், அருட்தந்தை பெஞ்சமின் டிசூசா ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். இரவு 7 மணிக்கு சிறப்பு ஆராதனை திருப்பலி நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு இருந்ததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் குருசுக்கோயில் திருவிழா கொடியேற்றம் குறைவான பக்தர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

 திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது.
  ஆலயத்தின் முக்கியத் திருவிழாவான 10ம் திருவிழா வரும் ஜூலை 25ம்தேதி ஆலயத்திருத்தேர் திருவிழா நிகழ்ச்சி ரத்து செய்யபட்டுள்ளது.  வருகிற ஜூலை 26ம்தேதி காலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

மக்கள் நலனுக்காக மக்கள் இல்லாமல் இவ்வாண்டு திருவிழா நடைபெறும் நிலையில் நேற்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்சியில் குருசுகோவில் பொதுமக்கள் அவர்கள் வீடு, மாடிகளில் மற்றும் வீதிகளில் கோவில் முன்பு நின்று கொடியேற்றம் மற்றும் அதன் பின்னர் நடந்த சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஆலயத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை அனைவரும் மாஸ்க் அணிந்து கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலிஸார் செய்திருந்தனர். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo