Onetamil News Logo

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்கள் மனு அளிக்க இயலாமல் திரும்பி சென்றனர்.

Onetamil News
 

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்கள் மனு அளிக்க இயலாமல் திரும்பி சென்றனர்.


ஸ்ரீவைகுண்டம் 2019 டிசம்பர்  6 ;உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்கள் மனு அளிக்க இயலாமல் சென்றனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இத்தகையசூழ்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சாயர்புரம் பகுதியான திருப்பணிசெட்டிக்குளத்தை சேர்ந்த சுயம்புலிங்கம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்திட தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் நட்டாத்தி எஸ்.வி.பி.எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன்  ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தார்.
யூனியன் அலுவலகத்தில் இருந்த தேர்தல் அலுவலர்கள் ‘’வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் எதனையும் வாங்கவேண்டாம்’’ என்று தங்களுக்கு தகவல் வந்துள்ளதாக கூறியதை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த வேட்பாளர்கள் அதிருப்தியுடன் திரும்பிச்சென்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo