Onetamil News Logo

அனைத்து வேளாண்மை கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இணையதளம் மூலமாக நாளை முதல் நடைபெறும் 

Onetamil News
 

அனைத்து வேளாண்மை கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இணையதளம் மூலமாக நாளை முதல் நடைபெறும் 


ஸ்ரீவைகுண்டம், 2020 ஆகஸ்ட் 6; தூத்துக்குடி மாவட்டம் ,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட கிள்ளிகுளம் உட்பட அனைத்து வேளாண்மை கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இணையதளம் மூலமாக நாளை முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்புக்கல்லூரிகள் மற்றும் 28இணைப்புக்கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பத்து இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2020-2021ம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை  நாளை (7ம் தேதி) முதல் தொடங்குகிறது. இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் துவங்கி வைக்கிறார்.
இளங்கலை பாடப்பிரிவுகளான, இளமறிவியல்(மேதமை) வேளாண்மை, இளமறிவியல்(மேதமை) தோட்டக்கலை, இளமறிவியல் (மேதமை) வனவியல், இளமறிவியல்(மேதமை) உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், இளம் தொழில்நுட்பம் (வேளாண் பொறியியல்), இளமறிவியல் (மேதமை) பட்டுவளர்ப்பு, இளம் தொழில் நுட்பம் (உணவு தொழில் நுட்பம்), இளம் தொழில்நுட்பம் (உயிரித் தொழில்நுட்பம்), இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச் சுழல் பொறியியல்) மற்றும் இளமறிவியல்(வேளாண் வணிக மேலாண்மை) ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் தேவையான விபரங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை  www.tnauonline.in    என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
                    மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்து கொள்ள  www.tnau.ac.in  இணைய தளத்தில் உள்ள தகவல் கையேடு உதவிகரமாக இருக்கும். மேலும் தெளிவுபெற 0422-6611322, 0422-6611328, 0422-6611345, 0422-6611346 ஆகிய தொலைபேசி உதவி சேவை எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களில், இணையதள வழியாக விண்ணப்பங்களை நிரப்ப, வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும், விண்ணப்பதாரர்கள் சேவை மையங்களை தொடர்பு கொண்டும், இணையதள வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வரும் செப்டம்பர் 17ம் தேதி கடைசி நாளாகும். இதனைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் 29ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என்று அதில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo