Onetamil News Logo

 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி  இன்று கைது ;டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் 5000 ரூபாய் பறிமுதல் விசாரணை தொடர்கிறது. 

Onetamil News
 

 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி  இன்று கைது ;டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் 5000 ரூபாய் பறிமுதல் விசாரணை தொடர்கிறது. 


                                                    
ஸ்ரீவைகுண்டம்  2019 நவம்பர் 8 ;ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயியிடம் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று மாலையில் கைது செய்தனர். 
 தூத்துக்குடி மாவட்டம்,கீழ வல்லநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சுந்தர் என்பவர் கோழி மற்றும் ஆட்டுப் பண்ணை அமைப்பதற்கு  ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறையில் தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். தீயணைப்புத்துறை அதிகாரி ரோலன் என்பவர் ரூ.5ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கு முடியும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து விவசாயி சுந்தர் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். 
விவசாயி புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்  ஜெயஸ்ரீ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையின் பெயரில்  டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை 3.30 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையம் சென்று, சுந்தரிடம் ரசாயனம் தடவிய ரூ.5ஆயிரம் பணத்தை கொடுத்து தீயணப்பு அதிகாரியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். இந்த நிலையில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தூத்துக்குடி விக்டோரியா தெருவைச் சேர்ந்தவர் ராஜ் இவரது மகன் ரோலன் (56),  என்பவரை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo