Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. 

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. 


ஸ்ரீவைகுண்டம், 2020 ஆகஸ்ட் 7;  ஸ்ரீவைகுண்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியம், நகர திமுக சார்பில் மறைந்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 2வது ஆண்டு நினைவுதினம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகபெருமாள் தலைமையில் கடைபிடிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கொம்பையா, நகர செயலாளர் பெருமாள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ஏழை-எளியவர் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு, முககவசம், கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
இதில், வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர்கள் ஜனார்த்தனன், ராம்குமார், சங்கரன், ஜெயராஜ், ஹரிமுருகன், மாவட்ட பிரதிநிதி சிவலிங்கராஜா, தொமுச தலைவர் முத்துராமலிங்கம், பொருளாளர் செல்லையா, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அருண்கிருஷ்ணன், பேரூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புராஜ், நகர இளைஞர் அணி தங்கவேல், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சின்னபாண்டி, ஊராட்சி செயலாளர்கள் முருகன், குமார், சண்முகசுந்தரம், கந்தன், வார்டு செயலாளர்கள் சிவா, ரமேஷ், கருப்பசாமி, சுடலைமுத்து, தர்மர், சிராஜூதீன், தர்மர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளரும், தொகுதி பொறுப்பாளருமான ஜனார்த்தனன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், வழக்கறிஞர்கள்  ராம்குமார், சங்கரன், ஜெயராஜ், ஹரிமுருகன் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo