Onetamil News Logo

ஆறாம்பண்ணையில் 72வருடங்களாகியும் தார்சாலை போடவில்லை ;மூன்று மாதத்தில் தார் ரோடு போட்டு தரப்படும்..! அதிகாரிகள் உறுதி-சாலைமறியல் போராட்டம் வாபஸ்

Onetamil News
 

ஆறாம்பண்ணையில் 72வருடங்களாகியும் தார்சாலை போடவில்லை ;மூன்று மாதத்தில் தார் ரோடு போட்டு தரப்படும்..! அதிகாரிகள் உறுதி-சாலைமறியல் போராட்டம் வாபஸ்


ஸ்ரீவைகுண்டம்  2019 ஜூலை 20 ;தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆறாம்பண்ணை நடுவக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊருக்கு கடந்த 72வருடங்களாகியும் இதுவரை தார்சாலை அமைத்து தராதது மற்றும் சுத்தமான குடிநீர் வசதி செய்து தராதது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24ம் தேதி கருங்குளத்தில் நெல்லை&திருச்செந்தூர் மெயின் ரோட்டில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். 
இதனைத்தொடர்ந்து இதுதொடர்பான சமாதானக்கூட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது-. மண்டல துணை தாசில்தார் சுந்தரராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலெட்சுமி, பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடுவக்குறிச்சி ஊர் பொதுமக்கள் சார்பில் குமார், கோபாலகிருஷ்ணன், ரத்தினசாமி, கண்ணன், பரமசிவன், ஜெனி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இன்னும் ஒருவார காலத்திற்குள் சரியான முறையில் குடிநீர் வசதி செய்து தரப்படும், மூன்றுமாத காலத்திற்குள் ஏற்கனவே போடப்பட்டுள்ள மெட்டல் ரோட்டில் புதியதாக தார் சாலை அமைத்து தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. சமாதானக்கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து ஊர்பொதுமக்கள் ஏற்கனவே அறிவித்திருந்த சாலைமறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக உறுதி அளித்தனர். இனியாவது மக்களை ஏமாற்றாத வகையில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தார் சாலை அமைத்து கொடுத்தால் சரிதான்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo