Onetamil News Logo

தூத்துக்குடி - பேய்குளத்தில் பகிர்மான வாய்கால் ரூ.51 லட்சம் செலவிலும், பகிர்மான வாய்கால் ரூ.52 லட்சம் செலவிலும்,பகிர்மான வாய்கால் ரூ.27.50 லட்சம் செலவிலும்,  ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேரூர் புறவழி கால்வாயில்  ரூ.61 லட்சம் செலவில் குடிமராமத்து திட்டத்தின்கீழ்

Onetamil News
 

தூத்துக்குடி - பேய்குளத்தில் பகிர்மான வாய்கால் ரூ.51 லட்சம் செலவிலும், பகிர்மான வாய்கால் ரூ.52 லட்சம் செலவிலும்,பகிர்மான வாய்கால் ரூ.27.50 லட்சம் செலவிலும்,  ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேரூர் புறவழி கால்வாயில்  ரூ.61 லட்சம் செலவில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மறு சீரமைப்பு செய்யும் பணி 


தூத்துக்குடி, 2020 மே 27 ; தூத்துக்குடி மாவட்டம் பொதுப்பணித்துறை தாமிரபரணி வடிநில கோட்டத்திற்குட்பட்ட ஏரல் வட்டம் இருவப்பபுரம் கிராமம் பேய்குளத்தில் பகிர்மான வாய்கால் எண் 4 ரூ.51 லட்சம் செலவிலும், பகிர்மான வாய்கால் எண் 5 ரூ.52 லட்சம் செலவிலும்,  பகிர்மான வாய்கால் எண் 6 ரூ.27.50 லட்சம் செலவிலும்,  ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேரூர் புறவழி கால்வாயில்  ரூ.61 லட்சம் செலவில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மறு சீரமைப்பு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன்  முன்னிலை வகித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்தாவது:
 தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி, வைப்பாறு, கோரம்பள்ளம் ஆகிய வடிநில கோட்டத்தில் உள்ள கண்மாய்களை குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரி புனரமைப்பு பணிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  நமது மாவட்டத்தில் இந்த வருடம் (2020-21) வைப்பாறு வடிநில கோட்டம் மூலம் ரூ.1.8 கோடி செலவில் 5 பணிகளையும், கோரம்பள்ளம் வடிநில கோட்டம் மூலம் ரூ.85 லட்சம் செலவில் 3 பணிகளையும்,  தாமிரபரணி வடிநில கோட்டம் மூலம் ரூ.4.27 கோடி செலவில் 9 பணிகள் என மொத்தம்  ரூ.7 கோடி செலவில் 17 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  வைப்பாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட எட்டயபுரம் வட்டம் அருணாசலபுரம் கண்மாயில் நமது மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணிகளையும், வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுவதையும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

இன்று தாமிரபரணி வடிநில கோட்டம் ஏரல் வட்டம் இருவப்பபுரம் கிராமம் பேய்குளத்தில் பகிர்மான வாய்கால் எண் 4 மடை பழுது பார்த்தல், தண்ணீர் செல்லும் கால்வாய் பாலம் திரும்ப கட்டுதல் உள்ளிட்ட பணிகள் ரூ.51 லட்சம் செலவிலும், பகிர்மான வாய்கால் எண் 5 மடை பழுது பார்த்தல், தண்ணீர் செல்லும் கால்வாய் பாலம் திரும்ப கட்டுதல் உள்ளிட்ட பணிகள் ரூ.52 லட்சம் செலவிலும்,  பகிர்மான வாய்கால் எண் 6 தண்ணீர் செல்லும் கால்வாய் பாலம் திரும்ப கட்டுதல் உள்ளிட்ட பணிகள் ரூ.27.50 லட்சம் செலவிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இன்று இதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.
அதேபோல்  ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேரூர் புறவழி கால்வாயில்  தலை மதகுகள் திரும்ப கட்டுதல் மற்றும் தடுப்பு சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.61 லட்சம் செலவில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மறு சீரமைப்பு செய்யும் பணிகளையும் தொடங்கி வைக்கப்பட்டது. தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பாக குடிமராமத்து திட்டம் நமது மாவட்டத்தில் செயல்படுத்துவதால்  விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். மேலும் நிலத்தடி நீர் உயர்வதோடு, மழை காலங்களில் கண்மாயிகளில் தேவையான தண்ணீர் சேகரித்து குடிநீர் பற்றாக்குறையை தடுக்க முடியும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிருத்விராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா,  தாமிரபரணி வடிநில கோட்டம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் அண்ணாத்துறை, உதவி பொறியாளர்கள்  ரகுநாதன், வென்மதி வேந்தன், வட்டாட்சியர்கள் அற்புதமணி (ஏரல்), சந்திரன் (ஸ்ரீவைகுண்டம்), பேய்குளம் நீர் பாசன பயன்படுத்துவோர் சங்க தலைவர் எஸ்.ஆர்.குணசேகரன், பொருளாளர் ஆர்.குணசேகரன், செயலாளர் ஜெயபொன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் முத்துகுமார், ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேரூர் புறவழி கால்வாய் நீர் பாசன பயன்படுத்துவோர் சங்க தலைவர் கணபதி, துணைத்தலைவர் நடராஜன், செயலாளர் கல்வெட்டுகாரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo