Onetamil News Logo

ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா   

Onetamil News
 

ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா   


ஸ்ரீவைகுண்டம்,  2020 ஜனவரி 20 ; ஆழ்வார்தோப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் ஆண்டுதோறும் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு, கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். பகுதி பொறுப்பாளர்கள் கண்ணன், பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். விழாவில் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரியார் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு 100ஏழை-எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதில், பகுதி பொறுப்பாளர் முருகசெல்வி, கிராமஉதய பணியாளர்கள், மையத்தலைவர்கள், பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தன்னார்வ தொண்டர் செல்வன்துரை நன்றி கூறினார்.
படம்: ஆழ்வார்தோப்பில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo