Onetamil News Logo

திருமண ஆசைகாட்டி புளியங்குளம் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்:  வழக்குப்பதிவு 

Onetamil News
 

திருமண ஆசைகாட்டி புளியங்குளம் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்:6பேர் மீது வழக்குப்பதிவு 


புளியங்குளம் 2018 டிசம்பர் 6 ; தூத்துக்குடி அருகே திருமண ஆசைகாட்டி புளியங்குளம் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட  புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்சோலை (18), (பெயர் மாற்றம்) இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ  படித்து வருகிறார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் இவரது மகன் பார்த்திபன் (24) என்பவரும் காதலித்து வந்ததாக போலீசார் கூறுகிறார்கள்.                                                                                                        
இந்த நிலையில் திருமண ஆசைகாட்டி பார்த்திபன் அவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவர் 4 மாத கர்ப்பிணியானார். ஆனாலும், திருமணம் செய்ய பார்த்திபன் மறுத்ததாக கூறப்படுகிறது.                                                           
அதன் பின்னர்  பார்த்திபன் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசியபோது, பொன்சோலையை தாக்கி, அவரது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்..                                                                      
                                
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்யப்பட்டு  பார்த்திபன், அவரது தந்தை சண்முகவேல், தாயார் விஜயா, சகோதரர்கள் மாரியப்பன், விஜய், சகோதரி சித்திரை வடிவு ஆகிய 6பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo