Onetamil News Logo

கீதாராணி உத்தரவு ;அனைத்து பள்ளிகளிலும் டெங்கு விழிப்புணர்வு ; கொங்கராயகுறிச்சி பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு 

Onetamil News
 

கீதாராணி உத்தரவு ;  அனைத்து பள்ளிகளிலும் டெங்கு விழிப்புணர்வு ; கொங்கராயகுறிச்சி பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு 


                                                                     
 தூத்துக்குடி 2019 அக்டோபர் 19 ;தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி அறிவுறுத்தலின்படி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி அவர்களின் ஆலோசனைப்படி அனைத்து பள்ளிகளிலும் டெங்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது இன்று சனிக்கிழமை கொங்கராயகுறிச்சி இல் உள்ள கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளியில் வைத்து காலை கூட்டு பிரார்த்தனையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் பள்ளி முதல்வர் சுமதி முன்னிலை வகித்தார் வல்லநாடு சுகாதார ஆய்வாளர் சாகிர் பேசுகையில் கொசுக்கள் உடைந்த பாத்திரம் பாட்டில் தேங்காய் சிரட்டை டயர்கள் பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றில்  தேங்கி நிற்கும் நீரில் உற்பத்தியாகிறது அதில் நீர் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் மற்றும் டெங்கு கொசுக்களை ஒழிப்பது பற்றியும் வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதைப் பற்றியும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அறிவுரை வழங்கினார் இதைத் தொடர்ந்து இறுதியில் பள்ளி மாணவ மாணவியர்கள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் இதில் ஆசிரியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்  முருகன் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo