Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டத்தில் முதல்முறையாக மும்மதத்தினர்களும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா 

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டத்தில் முதல்முறையாக மும்மதத்தினர்களும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா 


ஸ்ரீவைகுண்டம் 2020 ஜனவரி 13 ;ஸ்ரீவைகுண்டத்தில் முதல்முறையாக மும்மதத்தினர்களும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா காவல்துறை சார்பில் நடைபெற்றது.
    ஸ்ரீவைகுண்டத்தில் முதல்முறையாக மும்மதத்தினர்களும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா காவல்துறை சார்பில் நடைபெற்றது.  இவ்விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் சார்ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் ஹாலேன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

  ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், ஏரல் தாசில்தார் அற்புதமணி, குருசுகோயில் பங்குத் தந்தை மரியவளன், முஸ்லிம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஷாஜகான், பெருங்குளம் செங்கோல் ஆதினம், தொழிலதிபர் மாரியப்பன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
   விழாவில் காவல் துறையினரும் பொது மக்களும் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இதைதொடர்ந்து, சார் ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் ஹாலேன், டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் அருகில் உள்ள வயலில் மாடுகளை கொண்டு உழுது நெல் நாற்றுகளை நட்டனர். இதை தொடர்ந்து விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.
  ஏரல் சிந்து பைரவி கலைக்குழுவினரின் நாட்டுபுறப்பாட்டு, கலைமாமண முத்துராமலிங்கம் குழுவினரின் கணியான்கூத்து, மேலப்பாளையம் மாரிமுத்து குழுவினரிக் கரகாட்டம், ஆழ்வார்திருநகரி செல்வம் குழுவினரின் நாதஸ்வரம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  இதை தொடர்ந்து,  காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக கோலப்போட்டி, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

  காவல்துறையினர் தங்களது பணி சுமையினை மறந்து குடும்பத்தினருடன் இணைந்து பொது மக்களோடு விளையாடி மகிழ்ந்தனர்.
  இதற்கான ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பட்டாணி(ஏரல்), ஜோசப் ஜெட்சன்(ஸ்ரீவைகுண்டம்), ராகுராஜன்(செய்துங்கநல்லுர்), ஜுன்குமார்(ஆழ்வார்திருநகரி), லெட்சுமி பிரபா(அனைத்து மகளிர் காவல் நிலையம்) ஆகியோரது தலைமையில் காவல் துறையினர் செய்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo