Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை பள்ளியில் சித்த மருத்துவ முகாம்

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை பள்ளியில் சித்த மருத்துவ முகாம்


ஸ்ரீவைகுண்டம், செப்.20:தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட மணக்கரை பள்ளியில் சித்த மருத்துவ முகாம் நடந்தது.
தேசிய ஆயுஷ் குழுமம் மற்றும் மாநில ஆயுஷ் செயல்திட்ட குழுவும் இணைந்து கருங்குளம் வட்டாரத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி அறிவுறுத்தலின்படி நடந்து வருகிறது.
இதன்படி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் மணக்கரை டி.என்.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியை மேரி விக்டோரியா தலைமை வகித்தார். ஆசிரியை ரத்தினபாய் முன்னிலை வகித்தார். முகாமில் சித்த மருத்துவர் செல்வகுமார் கலந்துகொண்டு நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட சித்த மருத்துவம் கூறும் உணவு பழக்கவழக்க முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.  முடிவில் ஆசிரியை பியூலா நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜெயசிங், பொன் ஆசீர், சித்த மருத்துவ பணியாளர் மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo