Onetamil News Logo

கொங்கராயக்குறிச்சி, ஆறாம்பண்ணை பஞ்சாயத்து பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பாக கிருமி நாசினி

Onetamil News
 

கொங்கராயக்குறிச்சி, ஆறாம்பண்ணை பஞ்சாயத்து பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பாக கிருமி நாசினி


கொங்கராயக்குறிச்சி 2020 மார்ச் 26 ; கொங்கராயக்குறிச்சி, ஆறாம்பண்ணை பஞ்சாயத்து பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட துரித நடவடிக்கைகள் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயக்குறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் வழிபாட்டு தலங்களிலும் நேற்று சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல்சலாம் தலைமையில் நடைபெற்ற இப்பணிகளை ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக அரசின் 144 தடை உத்தரவுப்படி பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், வெளியே வருபவர்கள் தவறாமல் மாஸ்க் அணிந்திடவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதில், துணைத்தலைவர் சேர்மத்துரை, ஒன்றிய கவுன்சிலர் மைமூன் அப்துல் கரீம்,  முகைதீன் பள்ளிவாசல் தலைவர் அப்துல்காதர், கொங்கராயக்குறிச்சி கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ருசி இஸ்மாயில், பைத்துல்மால் உறுப்பினர் ஜாபர் சாதிக், கிராம நிர்வாக உதவியாளர் ஆனந்த், பஞ்சாயத்து செயலர் பிராங்கிளின் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து கொங்கராயக்குறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தவர்களின் வீடுகள் கண்டறியப்பட்டு அவர்களின்  வீடுகளில் அரசின் உத்தரவுப்படி கொரோனா குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

இதுபோன்று ஆறாம்பண்ணை பஞ்சாயத்து பகுதிகளிலும், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் சுகாதார ஆய்வாளர் ஜாகீர் உசேன், துணைத்தலைவர் அப்துல்கனி, முகைதீன் பள்ளிவாசல் செயலாளர் முன்னாமுகம்மது, கிராம நிர்வாக அலுவலர் கமல்ராஜ், கிராம நிர்வாக உதவியாளர் சரத்குமார், மக்கள் நலச்சங்க தலைவர் சையது, செயலாளர் அனீப்ஜியாவூதின் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கண்காணித்திடும்பொருட்டு அவர்களது வீடுகளில் அரசின் உத்தரவின்படி விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo