Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு ஆழ்குழாய் அமைக்க மானியம்

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு ஆழ்குழாய் அமைக்க மானியம்


ஸ்ரீவைகுண்டம் 2019 டிசம்பர்  6 ;ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஊமைத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் நிகழாண்டில் செயல்படுத்தப்படவுள்ள பிரதமந்திரி நுண்ணீர்பாசன திட்டத்தின் இதர திட்டங்களான துணைநிலை நீர்பாசன மேலாண்மை திட்டத்தில் நிலத்தடிநீர் பாதுகாப்பில் ஆழ்குழாய் கிணறு அல்லது துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடும் தொகையில் 50சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.25ஆயிரம் வழங்கப்படுகிறது.
அனைத்து குறுவட்டாரங்களிலும் டீசல் பம்புசெட் அல்லது மின்மோட்டார் பம்புசெட் அமைத்திட அதன்விலையில் 50சதவீதம் தொகை அல்லது அதிகபட்சமாக ரூ.15ஆயிரமும், நீர்பாசனக்குழாய் அமைப்பதற்கு 50சதவீத தொகை அல்லது ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.10ஆயிரம் மற்றும் தரைநிலை நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கு அதன்செலவில் 50சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.40ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. எனவே, ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo