Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டத்தில் சி.எஸ்.ஐ ஆலயம் முன்பு பெண்கள் திடீரென்று உள்ளிருப்பு போராட்டம் 

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டத்தில் சி.எஸ்.ஐ ஆலயம் முன்பு பெண்கள் திடீரென்று உள்ளிருப்பு போராட்டம் 


 ஸ்ரீவைகுண்டம், மே.31:ஸ்ரீவைகுண்டத்தில் சி.எஸ்.ஐ ஆலயம் முன்பு பெண்கள் திடீரென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீவைகுண்டம் சந்தையடி அருகே சி.எஸ்.ஐ பரிசுத்த இம்மானுவேல் ஆலயம் அமைந்துள்ளது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட இந்த ஆலயத்தின் போதகராக பீட்டர்தாமஸ் இருந்து வருகிறார். இந்நிலையில், போதகர் பீட்டர் தாமஸ் இங்கிருந்து முதலாம்மொழி ஆலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

திருமண்டல விதிகளுக்கு புறம்பாக போதகரை திடீரென்று காரணம் எதுவும் சொல்லாமல் இடமாற்றம் செய்ததை கண்டித்தும், மீண்டும் இதே ஆலயத்திற்கு நியமித்திட வலியுறுத்தியும் சபை மக்கள், பெண்கள் நேற்று திடீரென்று ஆலயத்தின் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமி பிரபா தற்போது 144தடை உத்தரவு அமலில் இருப்பதால் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என்றும், உங்கள் கோரிக்கை குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு மனு மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுகொண்டார்.

அதனைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். பெண்கள், சபையினர் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo