Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.


ஸ்ரீவைகுண்டம், 2020 ஆக.15: தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில், வட்டார தலைவர் நல்லகண்ணு, நகர தலைவர் சித்திரை, மகளிரணி பஞ்சவர்ணம், இளைஞர் காங்கிரஸ் பிச்சகண்ணு, வார்டு உறுப்பினர் சிவகளைபிச்சையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவகளை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிவகளை காங்கிரஸ் தலைவரும் 8வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினருமான சிவகளைபிச்சையா தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிச்சகண்னு, முத்துராஜ், முனியாண்டி, ஹைதர்அலி, ஐ.என்.டி.யு.சி சுப்பையா, பண்டாரசுவாமி,  சந்திகாவலபெருமாள், ஆதிநாராயணன், சொரிமுத்து, பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரூர் தேசிய சுதந்திர செந்தில் விநாயகர் கோவிலில் தியாகி செந்தில்பெருமாளின் பேரன் செந்தில்குமார் தலைமையில் தகவல்  அறியும் உரிமை பிரிவு  தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் கணேஷ்குமார் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில், ஆர்டிஐ பிரிவு வட்டாரத் தலைவர் கண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேஷ் 3-வது வார்டு தலைவர் அப்துல்லா மற்றும் அருணாச்சலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo