Onetamil News Logo

கொங்கராயக்குறிச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

Onetamil News
 

கொங்கராயக்குறிச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.


ஸ்ரீவைகுண்டம், 2020 மே.20: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.இந்நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் சரியான வேலை மற்றும் வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட நிவாரணப்பொருட்களும், ஆதரவற்றவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு கிராமங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் பொதுமக்களிடம் கொரோனா குறித்த துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொங்கராயக்குறிச்சி கிளை சார்பில் 100க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அரசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு கொங்கராயக்குறிச்சி கிளைத்தலைவர் ருசிஇஸ்மாயில் தலைமையில் செயலாளர் கலீல், பொருளாளர் மன்சூர் மற்றும் நிர்வாகிகள், மாணவர் அணியினர் வீடு வீடாக நேரில்சென்று கொரோனா நிவாரணப்பொருட்களை வழங்கினர்.
கொங்கராயக்குறிச்சி கிளை சார்பில் ஏற்கனவே முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50ஆயிரம் மதிப்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தற்போது 104குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி போன்றவை ரூ.1.50லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo