Onetamil News Logo

தாமிரபரணி பாசன குளங்களை தூர் வாரிட காங்கிரஸ் கோரிக்கை ;தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணைக்கட்டுகளின் மூலமாக 46ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி

Onetamil News
 

தாமிரபரணி பாசன குளங்களை தூர் வாரிட காங்கிரஸ் கோரிக்கை ;தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணைக்கட்டுகளின் மூலமாக 46ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி      


ஸ்ரீவைகுண்டம்  2019 ஜூன் 11 ;ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் தலைவர் சித்திரை கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியதாவது........: தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணைக்கட்டுகளின் மூலமாக 46ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த பாசன நிலங்களுக்கு தேவையான தண்ணீர் மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் வாய்க்கால்கள் மூலமாக பாசனக்குளங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

 

மருதூர் மேலக்கால் மூலமாக பாசன வசதி பெறும் வெள்ளூர் குளம் சரியான முறையில் தூர் வாரப்படாமல் பராமரிப்பின்றி பாழ்பட்டு கிடக்கிறது. இதுபோன்று தான் குளத்தில் இருந்து வயல்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன மடைகளும் சேதமாகி கிடக்கிறது. இதேநிலையில் தான் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள பத்மநாபமங்கலம் குளம், பேரூர் குளம், சிவகளை குளம் என அனைத்து குளங்களின் நிலையும் பராமரிப்பின்றி இருக்கிறது.
குளங்கள் தூர் வாரப்படாமல் கிடப்பதால் போதுமான தண்ணீரை மழைக்காலங்களில் தேக்கி வைக்க இயலவில்லை. பாசன வாய்க்கால்களிலுள்ள மடைகள் சேதமாகி கிடப்பதால் ஆண்டுதோறும் பலஆயிரம் கனஅடி தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகி வருகிறது. இதனால் கோடை காலங்களில் விவசாயிகள் போதுமான தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, பொதுப்பணித்துறையினர் வரும் கார் சாகுபடிக்கு முன்பாக தாமிரபரணி பாசனத்திலுள்ள பாசனக்குளங்கள் அனைத்தையும் தூர் வாரவும், பழுதாகி கிடக்கும் பாசன மடைகளை சீரமைக்கவும் துரித நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo