Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் அமலைச்செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் அமலைச்செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


ஸ்ரீவைகுண்டம், 2019 ஜூலை 20 ;தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இவ்வாறு நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து,வேளாண்மைக்கும் பயன்பட்டு வருகிறது 
தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வடகால், தென்கால் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் உறைகிணறுகள் அமைத்து, பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம் ஏராளமான ஊர்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கோடையை முன்னிட்டு, கடும் வறட்சி காரணமாகவும், தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், அணைகளில் இருந்து நீர்வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வடகால், தென்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
இந்த நிலையில்  ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை முழுவதும் அமலைச்செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் தடுப்பணையில் உள்ள தண்ணீரும் வேகமாக ஆவியாவதால், நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் உள்ள அமலைச்செடிகளை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo