Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணையில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணையில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்



ஸ்ரீவைகுண்டம், செப்.20: ஆறாம்பண்ணையில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆறாம்பண்ணை கிளை மற்றும் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவப்பிரிவு இணைந்து நடத்திய நிலவேம்பு குடிநீர் வழங்கும் சிறப்பு முகாம் கொங்கராயக்குறிச்சியில் நடைபெற்றது.
முகாமிற்கு, கிளைத்தலைவர் அப்துல்ஹமீது தலைமை வகித்தார். செயலாளர் ஜாஹித் அப்ரிதி, துணைத்தலைவர் காசிம் ஆகியோர் முன்னிலை வகித்தார். கிளை பொருளாளர் அக்பர்ஷா வரவேற்றார். முகாமில் பங்கேற்ற கிளைநிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவ, மாணவியர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்படுவதை தடுத்திடும்பொருட்டு சித்த மருத்துவர் செல்வக்குமார் நிலவேம்பு குடிநீர் வழங்கினார். 
இதில், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணைச்செயலாளர் முஸம்பில் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சித்த மருத்துவர் செல்வக்குமார் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆறாம்பண்ணை கிளையினர் செய்திருந்தனர்.
படவிளக்கம்: ஆறாம்பண்ணையில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo