Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டத்தில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டத்தில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.


ஸ்ரீவைகுண்டம்,2020 மே 21; ஸ்ரீவைகுண்டத்தில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தியின் 29வது ஆண்டு நினைவுதினம் நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதன்படி, தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசிஅமிர்தராஜ் ஆலேசானையின்பேரில், ஸ்ரீவைகுண்டம் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் மேடைப்பிள்ளையார் கோவில் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு வட்டார தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் நகர தலைவர் சித்திரை, ஐ.என்.டி.யு.சி., சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து இரண்டு நிமிட மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முககவசம் அணிந்தும் தகுந்த சமூகஇடைவெளியை கடைபிடித்தும் நடைபெற்ற இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் மதிசேகரன், சிவகளைபிச்சையா, சுப்பிரமணியன், முத்துகுமார், சுப்பையா, கே.டி.சி ஆனந்தகந்தன், காளியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சிவகளையில் நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் சிவகளை பிச்சையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo