ஆழ்வார்தோப்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்
ஸ்ரீவைகுண்டம் 2019 நவம்பர் 12 ;ஆழ்வார்தோப்பில் மகளிர் குழுவினர்-பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் மகளிர் குழுவினர், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் சிறப்பு முகாம் ஆழ்வார்தோப்பில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு, ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) நாகராஜன் தலைமை வகித்தார். சித்தமருத்துவர் ரதிசெல்வம், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி, தனிஅலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் வரவேற்றார்.முகாமில், ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலரும், ஆணையாளருமான சுப்பிரமணியன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு மகளிர் குழுவினர் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.முகாமில், தன்னார்வ தொண்டர்கள் செல்வன்துரை, சண்முகக்கனி, மகளிர் குழுவினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தலைமை கணக்காளர் ஜெஸிந்தா நன்றி கூறினார். முகாமிற்கான ஆழ்வார்தோப்பு கிராம உதயத்தினர் செய்திருந்தனர்.