Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 


ஸ்ரீவைகுண்டம்,  2020 செப் 15 ;தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போக்குவரத்துக்கழக ஓய்வூதிய பணியாளர்களுக்கு மருத்துவகாப்பீடு திட்டத்தை அமுல்படுத்தவேண்டும், 59 மாத டி.ஏ. உயர்வு நிலுவையை வழங்கவேண்டும், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்கவேண்டும், 2019ம் ஆண்டு பென்சன் சீராய்வு குழு பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர் நல அமைப்பு சார்பில் தமிழகமெங்கும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்படி, ஸ்ரீவைகுண்டம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ராஜன் தலைமை வகித்தார். நிர்வாகி பொன்ராஜ் முன்னிலை வகித்தார். போக்குவரத்து சிஐடியு மத்திய சங்க துணை தலைவர் குமரகுருபரன், தூத்துக்குடி மாவட்ட ஓய்வுபெற்ற அமைப்பின் தலைவர் சிவதாணுதாஸ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினர்.
இதில், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சங்கிலி பூதத்தான், சிவசுப்பு, ஆறுமுகம், சண்முகவேல், லட்சுமணன், காளியப்பன் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo