Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம்,அருகே ஆழ்வார்திருநகரியில் கண்பரிசோதனை முகாம்

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம்,அருகே ஆழ்வார்திருநகரியில் கண்பரிசோதனை முகாம்


ஸ்ரீவைகுண்டம், 2019 நவ.10: ஆழ்வார்திருநகரியில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கிராமமக்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீபராங்குச திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு, ஆழ்வார்திருநகரி கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார்.

சங்கரா கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சண்முகசுந்தரம், தன்னார்வ தொண்டர் முத்துராஜ், இலவச மருத்துவப்பிரிவு துறை பொறுப்பாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் சரக டி.எஸ்.பி.., சுரேஷ்குமார்  முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில், கண் மருத்துவர் கரண் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் ஆழ்வார்தோப்பு, நளராஜபுரம், நவலெட்சுமிபுரம், கேம்லாபாத், ஆழ்வார்திருநகரி, மளவராயநத்தம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். முகாமில் பங்கேற்றவர்களில் சுமார் 20பேர் இலவச கண்அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், பகுதி பொறுப்பாளர்கள் முருகசெல்வி, சண்முககனி, மையத் தலைவர்கள் உஷா, ஆயிஷா, சித்திமா உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தன்னார்வ தொண்டர் ஆனந்தசெல்வன் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo