Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் தலைவர் இல்ல திருமணவிழா

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் தலைவர் இல்ல திருமணவிழா


ஸ்ரீவைகுண்டம், 2020 பிப்.13: ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் தலைவர் இல்ல திருமண விழா நடந்தது.ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திரை-சுந்தரம்மாள் தம்பதியரின் மகன் ரமேஷ்பாண்டியனுக்கும், உடன்குடியை சேர்ந்த தூத்துக்குடி தெற்குமாவட்ட இந்து முன்னணி செயலாளர் சுடலைமுத்து-மலையரசி தம்பதியரின் மகள் அமச்சார் அமுதாவிற்கும் திருமணம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி ஸ்ரீரெங்கராஜபெருமாள் கோவிலில் நடைபெற்றது.
திருமண விழாவிற்கு, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசிஅமிர்தராஜ் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இவ்விழாவில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், அனைத்து அரசியல்கட்சி பிரமுகர்கள், தொழில்அதிபர்கள், அரசுத்துறையினர், உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திரை தலைமையில் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo