Onetamil News Logo

கருங்குளம் வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவத் துறையினருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Onetamil News
 

கருங்குளம் வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவத் துறையினருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 18 ; கருங்குளம் வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவத் துறையினருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 
தூத்துக்குடி  மாவட்ட அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழாக்களின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கமாகும். இதன்படி சுதந்திர தினவிழாவின்போது 2018-19ம்ஆண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மருத்துவத்துறையில் கருங்குளம் வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்கள் செல்வக்குமார்(வல்லநாடு), கலா (கருங்குளம்) மற்றும் செவிலியர் அருணா, சேவைப்பணியாளர் பெருமாள்பேபி, கிராம சுகாதார செவிலியர் மைதிலி ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். நற்சான்றிதழ் பெற்றுள்ள மருத்துவத்துறை பணியாளர்களை கருங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சுந்தரி மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo