Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம் சரகத்தில் கிராமபுறங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமரா

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம் சரகத்தில் கிராமபுறங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமரா


 ஸ்ரீவைகுண்டம் 2019 ஆகஸ்ட் 16 ;தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மூலமாக  ஸ்ரீவைகுண்டம் சரகத்தில் கிராமபுறங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு சீருடை அணிந்த காவலர் ஒருவர் அந்த பேருந்தில் பயணம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நிகழ்ந்துவரும் குற்றச்சம்பவங்களை குறைத்திடும் பொருட்டு பஸ் மார்ஷல் திட்டத்தை விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி,  ஸ்ரீவைகுண்டம் அரசு பணிமனையில்இருந்து கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வரும் 16 வழித்தடங்களில் செல்லும் அரசு பேருந்துகளில் பஸ் மார்ஷல் என்றழைக்கப்படும் பேருந்து காவலன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 
இன்று ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் நடந்த பஸ் மார்ஷல் திட்ட துவக்கவிழாவில்,  டி.எஸ்.பி.சுரேஷ்குமார் கலந்துகொண்டு அரசு பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி அத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு, இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் விஜயகுமார், உதவிப்பொறியாளர் ராமச்சந்திரன், குமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் எட்வர்டு அந்தோணிராஜ் வரவேற்றார்.
பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் டிஎஸ்பி சுரேஷ்குமார் கூறியதாவது, பஸ்களில் ஜாதி ரீதியான வாசகங்களை எழுதுவதை தடுத்திடவும், பஸ்களை சிலர் சேதப்படுத்தி வருவதில் இருந்து பாதுகாத்திடவும், பயணத்தின் போது டிக்கெட் எடுக்காமல் செல்லுதல் போன்ற நிகழ்வுகளை தடுக்கவும், குறிப்பாக பெண்கள், மாணவியர்கள்,பாதுகாப்பாக பயணிக்கவும் இத்திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார். 
 இதில்,  இதில், ஆழ்வை இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி, சப்&இன்ஸ்பெக்டர்கள் முருகப்பெருமாள், பெருமாள், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் திருப்பதி, பொருளாளர் பார்வதி, உறுப்பினர் செல்வகண்ணா, கேஜிஎஸ் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன், ஆசிரியை, ஆசிரியர்கள், காவல்துறையினர், போக்குவரத்து துறையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo