Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாய ஆர்வலர் குழுவினருக்கு திறன் வளர்த்தல் பயிற்சி முகாம்

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாய ஆர்வலர் குழுவினருக்கு திறன் வளர்த்தல் பயிற்சி முகாம்


ஸ்ரீவைகுண்டம்,  2020 செப் 15 ;ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாய ஆர்வலர் குழுவினருக்கு திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஊமைத்துரை உத்தரவின்பேரில் ‘அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டம்’ மூலமாக விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திற்குட்பட்ட நாராயணபுரம் விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கு ‘ஆடு, மாடு, கோழி வளர்ப்பு மற்றும் தீவனப்பயிர் வளர்க்கும் முறைகள் குறித்த திறன் வளர்த்தல் பயிற்சி முகாம்’ நடைபெற்றது. முகாமிற்கு, ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஊமைத்துரை தலைமை வகித்தார்.
முகாமினை, தானம் அறக்கட்டளை மேகநாதன் துவக்கி வைத்து குழுப்பதிவேடுகளை பராமரிப்பது, பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக வட்டார அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா வரவேற்றார்.

முகாமில், ஸ்ரீவைகுண்டம் கால்நடை மருத்துவர் பூதலிங்கம் கலந்துகொண்டு, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, தீவனப்பயிர்களை வளர்க்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இதில், நாயராயணபுரம் பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். முடிவில், உதவி வேளாண்மை அலுவலர் மகேஷ்மூர்த்தி நன்றி கூறினார்.
பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா தலைமையில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அசோக்அய்யாச்சாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo