Onetamil News Logo

திருவைகுண்டம் அணை பகுதிகளில் அகற்றப்பட்டுள்ள கருவேலமரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு ;கலெக்டர் பார்வை 

Onetamil News
 

திருவைகுண்டம் அணை பகுதிகளில் அகற்றப்பட்டுள்ள கருவேலமரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு ;கலெக்டர் பார்வை 



தூத்துக்குடி  ஜனவரி 12 ;
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ், உத்தரவின் பேரில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு திருவைகுண்டம் அணையின் சுற்றுப்புற பகுதி தூய்மைபடுத்தப்பட்டு, பொது மக்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ்,, மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, திருவைகுண்டம் தாமிரபரணி ஆற்றையும், அதன் சுற்றுப்புற பகுதிகளையும் தூய்மைபடுத்த, துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தவிட்டார்கள். 
                                                                                                                                                                                                 அதன்படி  சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு சுமார்  2.1/2 சதுர கிலோ மீட்டர் தூரம் வரையில் திருவைகுண்டம் அணையின் கீழ் பகுதியில் புன்னக்காயல் வரையுள்ள தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மணல் பங்கான பகுதிகளில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதை, திருவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ்பயஸ் அருள் , பொதுப்பணித்துறையினருடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொண்டு, திருவைகுண்டம் அணைப்பகுதிகளில் தேங்கி இருந்த அமலைச்செடிகளை முற்றிலுமாக அகற்றினார்கள். மேலும், அணையின் கீழ் பகுதியில் பழைய பாலத்திலிருந்து புது பாலம் வரையிலும் அடர்ந்து, வளர்ந்து இருந்த கருவேலமரங்களை அகற்றி அந்த பகுதி முழுவதுமாக சுத்தப்படுத்தி, அப்பகுதியைச் சார்ந்த சுற்றுவட்டார பொது மக்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகியவற்றை குடும்பத்தினருடன் வந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
                                                                                                                                                                                                      
 இன்று  திருவைகுண்டம் அணை பகுதிகளில் அகற்றப்பட்டுள்ள கருவேலமரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, திருவைகுண்டம் பகுதியை சுற்றியுள்ள கிராமமக்கள்; பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அணைப்பகுதி சுற்றியுள்ள இடங்களில் சிறுவர், சிறுமியர்கள் காணும் பொங்கல் தினத்தன்று விளையாடி மகிழும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - என மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ், தெரிவித்தார்கள். மேலும், பொது மக்கள் அணைப்பகதுயில் படகுசவாரி ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்கள். 
                                                                                                                                  ஆய்வின் போது, சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்,, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ரகுநாதன், சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், திருவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo