Onetamil News Logo

பிரியங்கா காந்தியை உத்திரப்பிரதேச போலீசார் கைது செய்ததை கண்டித்து  ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

Onetamil News
 

பிரியங்கா காந்தியை உத்திரப்பிரதேச போலீசார் கைது செய்ததை கண்டித்து  ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 


ஸ்ரீவைகுண்டம்  2019 ஜூலை 20 ;ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பிரியங்கா காந்தியை உத்திரப்பிரதேச போலீசார் கைது செய்ததை கண்டித்து தூத்துக்குடி தெற்குமாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு, நகர தலைவர் சித்திரை, ஐஎன்டியுசி சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள் பிரியங்காகாந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்யாத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்ட துணைச்செயலாளர் சீனிராஜேந்திரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சிவனனைந்தபெருமாள், பிச்சைகண்ணன், செய்தி தொடர்புபிரிவு மரியராஜ், சிவகளைபிச்சையா, வட்டார பொருளாளர் பந்தல்முருகன், நகர தலைவர்கள் பாக்கர்அலி, சற்குரு, பாலசிங், ஜேக்கப், மூக்காண்டி, மற்றும் முத்துக்குமார், பிச்சைமணி, தாசன், பொன்கிருஷ்ணன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo