Onetamil News Logo

வெளி மாநில லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை:  தூத்துக்குடி அருகே 3 பேர் கைது ;7 வெளி மாநில லாட்டரி சீட்டுக்கள், மற்றும் ரூ.5,970 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Onetamil News
 

வெளி மாநில லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை:  தூத்துக்குடி அருகே 3 பேர் கைது ;7 வெளி மாநில லாட்டரி சீட்டுக்கள், மற்றும் ரூ.5,970 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தூத்துக்குடி 2019 நவம்பர் 6 ;தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட சாயர்புரம் பகுதியில்  தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வது போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி காவல் ஆய்வாளர்  ரகுராஜன் தலைமையிலான போலீசார்  சாயர்புரம் போப் கல்லூரி அருகே உள்ள கடை முன்பு சோதனை செய்தனர்.அதில் 3பேர்  சேர்ந்து லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. அப்போது அங்கு கேரள மாநில லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
 
இதையொட்டி லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஏரல் புதுமனையைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் காளிமுத்து (24), சாயர்புரம் சர்ச் தெருவைச் சேர்ந்த டேனியல் மகன் ராபர்ட் (52), செவத்தையாபுரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கோவில்பிச்சை (எ) துரை (66) ஆகிய மூவரையும் கைது செய்தனர். போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் லாட்டரி சீட்டுகள் அடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் எந்திரம் ஆகியவற்றையும், கேரள மாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து 7 வெளி மாநில லாட்டரி சீட்டுக்கள், மற்றும் ரூ.5,970 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo